\
Dr. B.R. Ambedkar Embraced Buddhism: Significance of the Day
கோப்புபடம்AI

இந்து மதத்தை ஏன் துறந்தார் அம்பேத்கர்? புத்த மதத்தைத் தழுவியதன் பின்னணி!!

இன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய தினம். இது குறித்துப் பார்க்கலாம்.
Published on: 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இந்து மத சாதி அமைப்புகளைக் கடுமையாக எதிர்த்து, தனது இறப்புக்கு 53 நாட்களுக்கு முன்பு 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் புத்த மதத்தைத் தழுவினார். 1935ஆம் ஆண்டிலேயே தான் இந்துவாக இறக்க மாட்டேன் என்று அம்பேத்கர் பகிரங்கமாக அறிவித்திருந்தார். சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை இந்து மத நூல்களும் வழிபாட்டு முறைகளும் நியாயப்படுத்துவதாக அவர் கருதினார்.

கோப்புபடம்
கோப்புபடம்AI

மகத் சத்தியாகிரகப் போராட்டம், மனுஸ்மிருதி எரிப்பு, நாசிக் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம் போன்ற பல வரலாற்றுப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்து சமூகத்தை உள்ளிருந்து திருத்த முடியாது என்ற முடிவுக்கு அம்பேத்கர் வந்தார். சுமார் 20 ஆண்டுகள் சீக்கியம், இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்த அவர், சமத்துவம், பகுத்தறிவு மற்றும் மனிதநேயம் போற்றுவதாகக் கருதி புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய மண்ணில் தோன்றிய புத்த மதம், சாதிப் பாகுபாடற்ற மாற்று வழியை வழங்கியதால் அதையே சரியான தேர்வாக அம்பேத்கர் கருதினார். நாக்பூரில் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் புத்த மதத்தைத் தழுவிய அவர், சாதி முறையை நிராகரிப்பது உள்ளிட்ட 22 உறுதிமொழிகளைத் தன் தொண்டர்களுக்கு வழங்கினார். இந்த மாபெரும் மாற்றம் நவீன வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் அடித்தளமாக அமைந்தது.

Dr. B.R. Ambedkar Embraced Buddhism: Significance of the Day
வெறும் 60 காட்சிகள்.. ரூ.50 கோடி வசூல்.. திரையுலகைப் புரட்டிப்போட்ட புதிய பிளாக்பஸ்டர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com