இந்தியா
வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய உறவினர் (வீடியோ)
வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய உறவினர் (வீடியோ)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வரதட்சணை விவகாரம் தொடர்பாக பெண் ஒருவரை, அவரது உறவினரே தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வீட்டினுள் புகுந்த இரண்டு இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அந்த பெண்னை கடுமையாக தாக்குகின்றனர். வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடிக்கும் காட்சி நெஞ்சை பதறச் செய்கிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு அந்த பெண் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீஸார், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.