நண்பரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கும் நேர்ந்த பரிதாபம் - இரட்டை கொலையால் பெங்களூரு மக்கள் அதிர்ச்சி

பெங்களூரு கும்பார்பேட்டையில், சமையல் உபகரணங்கள் விற்கும் கடையில் நேற்றிரவு இரட்டை கொலை நடந்துள்ளது. பரபரப்பு மிகுந்த இந்த பகுதியில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suresh
Sureshpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரு கும்பார்பேட்டையில், ஹரி மார்கெட்டிங் என்ற சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தப் பகுதியில், வழக்கம் போல் நேற்று உரிமையாளர் சுரேஷ் (55), கடையில் இருந்துள்ளார், அப்போது அவரது நெருங்கிய நண்பர் மகேந்திரா (68) என்பவர் வந்துள்ளார்.

murder
murderpt desk

அந்த நேரம் திடீரென கடைக்குள் புகுந்த ஒருவர், சுரேஷை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதை தடுக்க முற்பட்ட நண்பர் மகேந்திராவையும் கொலை செய்துவிட்டு, அந்த நபர் தப்பியோடி விட்டார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். கை ரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்துத் தகராறு காரணமாக தூரத்து உறவினரே கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பத்ரா என்பவரிடம் அல்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police
Policept desk

பரபரப்பு மிகுந்த பகுதியில், இரட்டை கொலை நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com