\
முக்கியமான கால்பந்து போட்டிகளை தூர்தர்ஷனும் ஒளிபரப்பும் : மத்திய அரசு அரசாணை

முக்கியமான கால்பந்து போட்டிகளை தூர்தர்ஷனும் ஒளிபரப்பும் : மத்திய அரசு அரசாணை

முக்கியமான கால்பந்து போட்டிகளை தூர்தர்ஷனும் ஒளிபரப்பும் : மத்திய அரசு அரசாணை
Published on

முக்கியத்துவம் வாய்ந்த கால்பந்து போட்டிகளின் ஒளிபரப்பை, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தூர்தர்ஷனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியினை தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பு செய்ய சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளின் ஒளிபரப்பையும், சந்தோஷ்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கான ஒளிபரப்பையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அனைத்துப் போட்டிகளின் ஒளிபரப்பையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com