மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலி

மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலி
மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் துர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் பலியாகினர்.

சத்தீஷ்கர் மாநிலத்தில், நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இங்கு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சப் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப், கான்ஸ்டபிள் மங்களு உட்பட சிலர் சென்றனர். அங்குள்ள, தந்டேவாடா மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதி. அங்கு சென்றபோது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ, சப் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரதாப், கான்ஸ்டபிள் மங்களு ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

இந்த தகவலை சத்தீஷ்கர் மாநில மூத்த போலீஸ் அதிகாரி (நக்சல் ஒழிப்பு) சுந்தர்ராஜ் உறுதிப்படுத்தினார். இது தொடர்பான மாவோயிஸ் டுகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க மேலும் பாதுகாப்பு படையினர்  வரவழைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com