"ஹெலிகாப்டர் விபத்து குறித்த யூகங்கள் பரப்புவதை தவிர்க்கவும்”- விமானப்படை வேண்டுகோள்

"ஹெலிகாப்டர் விபத்து குறித்த யூகங்கள் பரப்புவதை தவிர்க்கவும்”- விமானப்படை வேண்டுகோள்
"ஹெலிகாப்டர் விபத்து குறித்த யூகங்கள் பரப்புவதை தவிர்க்கவும்”- விமானப்படை வேண்டுகோள்

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான உண்மை கண்டறியப்படும்வரை யூகங்களை தவிர்க்க வேண்டும் என விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்திருந்தார். அவர் தற்போது 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தானது, Mi-17 V5 ரக ஹெலிகாப்டரில் நடந்துள்ளது. ராணுவ போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்க முடியும். உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த ஹெலிகாப்டரை ஓட்டிய அனைத்து விமானிகளுமே அனுபவசாலிகள்தான். அப்படி இருந்தும் எப்படி விபத்து ஏற்பட்டது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. போலவே ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச்சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும், கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம்.

இப்படி பல நன்மைகள் இருந்தபோதிலும், இது விபத்துக்குள்ளானது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து ‘ஹெலிகாப்டர் இப்படி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் - அப்படி விபத்துக்குள்ளாகியிருக்கலாம்’ என பலரும் யூகத்தின் அடிப்படையில் கணித்து கருத்து தெரிவித்தனர். அவற்றைத்தடுக்க எண்ணி, விமானப்படை தரப்பிலிருந்து, “ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பது தொடர்பாக விசாரிக்க, முப்படைகள் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 08 Dec 21. The inquiry would be completed expeditiously &amp; facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided.</p>&mdash; Indian Air Force (@IAF_MCC) <a href="https://twitter.com/IAF_MCC/status/1469195519570288646?ref_src=twsrc%5Etfw">December 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை இறந்தவர்களின் கண்ணியம் காக்க, விபத்து குறித்து யூகம் செய்வதை தவிர்க்கவும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com