'மது அருந்திவிட்டு பீகாருக்கு வராதீர்கள்' - முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்

'மது அருந்திவிட்டு பீகாருக்கு வராதீர்கள்' - முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்

'மது அருந்திவிட்டு பீகாருக்கு வராதீர்கள்' - முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்
Published on
'மது அருந்துபவர்கள் திறமையற்றவர்கள்; சமூகத்திற்கு எதிரானவர்கள்' என்று காட்டமாகக் கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
பீகார் மாநிலத்தில் பூரண மது விலக்கு கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ளது. நாட்டு சாராயம் காய்ச்சினால், அது கள்ளச் சாராயம் என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டது. பொது இடங்களில் குடித்தால் 7 ஆண்டுகளும், வீட்டில் குடித்து விட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தால் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சசாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ''மாநிலத்திற்கு வருபவர்கள் கொஞ்சமாவது மது அருந்த அனுமதி கொடுங்கள் என்கிறார்கள். ஆனால் அது சாத்தியமா? அவர்களை மது அருந்த அனுமதிப்போமா? பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை மது அருந்த அனுமதிப்பீர்களா எனக் கேட்டால், அப்படிப்பட்டவர்கள் பீகாருக்கு வராதீர்கள் என்பேன். மது அருந்துபவர்கள் பீகாருக்கு வர வேண்டிய அவசியமில்லை.
மாநிலத்திற்கு வெளியே மது அருந்திவிட்டு நுழைய விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தும் எண்ணமில்லை. மதுவிலக்கு விதிப்பதற்கான எங்களது அரசின் முடிவு பெரிதும் பாராட்டப்பட்டது. ஒருவர் மது அருந்தினால் எவ்வளவு படித்தவராகவும், அறிவாளியாகவும் இருந்தாலும், அத்தகையவர்கள் திறமையானவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் மகாத்மா காந்திக்கு எதிரானவர்கள், சமூகத்திற்கு எதிரானவர்கள்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com