பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவரின் பேச்சை ரெக்கார்ட் செய்த கொரோனா பாதித்த பெண்
"தவறு செய்துவிட்டேன் யாரிடமும் சொல்ல வேண்டாம்" என 108 ஆம்புலன்சில் பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் கெஞ்சியுள்ளார் டிரைவர். அந்த நபர் பேசியதை பாதிக்கப்பட்ட பெண் பதிவு செய்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கொரோனா பாதித்த 18 வயது இளம்பெண், சனிக்கிழமை இரவு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, அரன்முல்லா விமான நிலையம் அருகே ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுனர், வாகனத்திலேயே கொரோனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் உடலில் காயங்களுடன் அந்த பெண்ணை கொரோனா முகாமில் இறக்கிவிட்டுள்ளார். இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவ்பால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி கே.ஜி.சைமன் "பாலியல் வன்கொடுமைக்கு பின்பு அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தவறு நடந்துவிட்டது, இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டும். ஆனால் அந்த நபரின் பேச்சை தன்னுடைய செல்போனில் பெண் பதிவு செய்துள்ளார். இந்த ஆதாரங்களை நாங்கள் சேகரித்துவிட்டோம்" என்றார்.
மேலும் பேசி சைமன் "இந்த ஆதாரங்களை உடனடியாக சமர்பித்து குற்றவாளித்து தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இது மிகவும் மோசமான சம்பவம். அநீதி இழைக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபர் யார் என்றே தெரியாது. அதனால்தான் விவரங்களை சேகரித்து நேற்று இரவே துரிதமாக நடவடிக்கை எடுத்து அந்த நபரை கைது செய்தோம். ஏராளமான ஆதாரங்களை சேகரித்துவிட்டோம்" என்றார்.