உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பியில் திருவிழாவை முன்னிட்டு கழுதை சந்தை நடைபெற்றது.
பல இனங்களில் கழுதைகள் இங்கு விற்பனைக்கு அழைத்து வரப்பட்டன. இங்கு வாங்கப்படும் கழுதைகள் வைஷ்ணவ் தேவி கோயில் யாத்திரைக்கு பக்தர்களை அழைத்து செல்ல பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் தொடங்கி பல லட்ச ரூபாய் வரை கழுதைகள் விற்பனையாகின. சிலர் இந்த சந்தையில்தான் தங்கள் குடும்ப திருமணங்களைக் கூட நிச்சயிப்பார்களாம்.