பக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை

பக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை
பக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மதம் சார்ந்த அமைப்புகளும் முன்வந்துள்ளன. பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அதற்காக தாங்கள் செலவழிக்கும் தொகையில் 10 சதவிகிதத்தை வெள்ள நிவாரண நிதியாக தர வேண்டும் என இந்திய இஸ்லாமிய மையம் என்ற அமைப்பு கூறியுள்ளது. 

இத்தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என அந்த மையத்தின் தலைவரும் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினருமான மவுலானா காலித் ரஷீத் ஃபாரங்கி தெரிவித்துள்ளார். ரஷீத் ஃபாரங்கி கூறுகையில், “பக்ரீத் பண்டிகை உண்மையாக அர்த்தத்தில் தியாகத்தை வெளிப்படுத்துவதாகும். கேரள மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நம்முடைய உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது” என்றார். பக்ரீத் பண்டிகை புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் கேரள மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் இயன்றவரை உதவ வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அதற்கான தொகையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்படும் என்று கேரள அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com