இந்தியா
அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர்
அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர்
இந்தியப் பிரபலங்கள் மற்றும் சின்னங்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படத் தவறினால், உடனடியாக ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று அமேசான் நிறுவனத்தை மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்ளார்.
நடத்தையை சரிப்படுத்துமாறும், தவறினால் பின்விளைவு உடனே ஏற்படும் என்றும் சக்திகாந்த தாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்கள் முன்பு இந்திய தேசியக் கொடி அச்சிட்ட மிதியடியை விற்பனைக்கு வெளியிட்ட அமேசான் நிறுவனம், இப்போது காந்தியின் உருவம் அச்சிட்ட காலணியை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

