“கைதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மரண தண்டனை கூடாது” - உச்சநீதிமன்றம்

“கைதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மரண தண்டனை கூடாது” - உச்சநீதிமன்றம்

“கைதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மரண தண்டனை கூடாது” - உச்சநீதிமன்றம்
Published on

மனநலம் பாதிக்கப்பட்ட கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து படுகொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஒரு குற்றத்துக்காக தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவிக்கும்போது, மனநலம் பாதிக்கப்படும் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என தெரிவித்தனர். 

தான் செய்த மிகப்பெரிய குற்றத்துக்காகவே மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்பதை உணரக்கூடிய மனநிலையில் அவர்கள் இல்லாதபோது, தண்டனையை நிறைவேற்றுவது அதன் நோக்கத்தையே சீர்குலைக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இது மிக தீவிரமான மனநல பாதிப்பு கொண்ட கைதிக்கும், அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com