இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு பேசி தீர்வு காணுங்கள்: அமெரிக்கா

இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு பேசி தீர்வு காணுங்கள்: அமெரிக்கா
இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு பேசி தீர்வு காணுங்கள்: அமெரிக்கா

இந்தியாவும், சீனாவும் எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா - பூட்டான் - சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் குவிக்‍கப்பட்டிருக்‍கும் இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதனால், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதா் நவெர்ட், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com