\
நாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

நாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

நாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
Published on: 

உத்தரபிரதேசத்தில் நாய்கள் கடித்து 12 வயது சிறுமி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிதப்பூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ரீனா என்ற 12 வயது சிறுமியை 4 நாய்கள் அடுத்தடுத்து தாக்கி கடித்துள்ளன. நாய்கள் கடித்து குதறியதில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்ட உறவினர்கள், கம்பு, தடிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வெறிநாய்கள் கடித்து தங்கள் பகுதியில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாகவும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

நடப்பு மே மாதத்தில் நிகழும் 7-வது சம்பவம் எனவும், கடந்த 6 மாதத்தில் நாய்கள் கடித்து சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com