கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?
கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பே குரங்கம்மை குறித்து உறுதியாக சொல்ல முடியும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த கொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் குரங்கு அம்மை பரவி வரும் சூழலில், அங்கிருந்து வந்த அந்த நபர் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த நபரின் தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த நபரின் நெருங்கிய தொடர்பில் இருந்த ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரின் நெருங்கிய தொடர்பில் இருந்த கொச்சியை சேர்ந்த நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவருக்கு "ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்" எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக அந்த நபரின் மாதிரிகள் புனே வைராலஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் வந்த பின்பு குரங்கம்மை பாதிப்பு குறித்து உறுதி சொல்ல முடியும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com