\
வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
Published on

இமாச்சலப்பிரேதசத்தில், நோயாளியின் வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் எடுத்துள்ளனர்.

இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு வயிற்று வலி என்று கூறி, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்று பகுதியை ஸ்கேன் செய்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. எனென்றால் அவர் வயிற்றுக்குள் இருந்தது,  8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி. 

இது அவ்வளவும் வயிற்றுக்குள் எப்படி போனது என்று அவரிடம் கேட்டால், ஒன்றும் சொல்லாமல் விழித்திருக்கிறார். இதையடுத்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பொருட்களை அகற்றினர். 

இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிகில் கூறும்போது, ‘’வயிற்றுக்குள் அந்த பொருட்கள் இருந்ததை அறிந்ததும் எங்கள் மருத்துவக் குழு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அவற்றை நீக்கியது. சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதை செய்திருக்கிறார். இது அரிதான ஒன்று’’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com