ஒரு மணி நேர அறுவை சிகிச்சை: 206 சிறுநீரக கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை

ஒரு மணி நேர அறுவை சிகிச்சை: 206 சிறுநீரக கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை
ஒரு மணி நேர அறுவை சிகிச்சை: 206 சிறுநீரக கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை

ஹைதராபாத்தில் நோயாளி ஒருவருக்கு 206 சிறுநீரகக் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ராமலக்ஷ்மையா என்பவர் (56 வயது) கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அவேர் க்ளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு 206 சிறுநீரகக் கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நோயாளிக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, ஒரு மணி நேரம் நீடிக்கும் கீஹோல் அறுவை சிகிச்சைக்கு (keyhole surgery) தயார்படுத்தப்பட்டதாகவும், அப்போது அனைத்து சிறுநீரக கற்களும் அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராமலக்ஷ்மையா முழுமையாக குணமடைந்து, இரண்டாவது நாளில் வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போதிய தண்ணீர் அருந்தாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போதியளவு நீர் அருந்தி உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிக்கலாம்: பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com