"டெல்லியில் இருக்க வேண்டாம்"- சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அட்வைஸ்

"டெல்லியில் இருக்க வேண்டாம்"- சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அட்வைஸ்
"டெல்லியில் இருக்க வேண்டாம்"- சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அட்வைஸ்

டெல்லியில் நிலவிவரும் கடுமையான மாசுபாடு காரணமாக அங்கு இருக்கவேண்டாம் என சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா மற்றும் மார்பக தொற்று இருந்து வருகிறது. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் சோனியா காந்தியை டெல்லியில் இருக்கவேண்டாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெப்பமயமான பகுதியில் சென்று சில நாட்கள் தங்கும்படி பரிந்துரை செய்துள்ளதால், கோவா அல்லது சென்னைக்கு ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் வர வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 30-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பிய சோனியா காந்திக்கு டெல்லியில் நிலவிவரும் கடுமையான மாசுபாட்டால் மருந்துகள் எடுத்தும், மார்பு தொற்று அதிகரித்துக்கொண்டே செல்வதால் மருத்துவர்கள் இதனை அறிவுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் வெளிநாட்டு சிகிச்சைக்குப் பின்பு, கோவாவில் ஓய்வெடுக்கச் சென்ற சோனியா, சைக்கிளிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com