\
குடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம்

குடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம்

குடிபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர் கைது - கர்ப்பிணிப் பெண் மரணம்
Published on

குஜராத் மாநிலம் போட்டாடு பகுதியில் மருத்துவர் குடிபோதையில் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜ்கோட், போட்டாடு பகுதியை சேர்ந்த காமினி சாஷியா(22) பிரசவ வலியின் காரணமாக நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அப்போது மருத்துவர் பரேஷ் லக்கானி பணியில் இருந்துள்ளார். ஆனால் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதையடுத்து காமினி சாஷியாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் பரேஷ் லக்கானியே பிரசவம் பார்த்துள்ளார். இதில் தாய் காமினி சாஷியாவும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து மருத்துவர் குடிபோதையில் இருந்தது குறித்து பெண்ணின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாவ்நகர் சிவில் மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடை சட்டத்தின் கீழ் பரேஷ் லக்கானி கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,“தற்போது தடைச் சட்டத்தின் கீழ் லக்கானி கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” எனத் தெரிவித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com