கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் முகமது அஷ்ரப் மிர் என்பவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இந்தியாவில் சுமார் 21.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 43,000 க்கும் அதிகமானோர் கொரோனாவினால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் முகமது அஷ்ரப் மிர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காஷ்மீர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் .

‘மருத்துவர் முகமது அஷ்ரப் மிர்ருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும் ஸ்ரீநகரில் உள்ள ஷேர் காஷ்மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்’ என சுகாதார துறை அதிகாரிகள் தெரித்துள்ளனர். 

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 463 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 24,000க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு நாடு முழுவதும் சுமார் 200 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com