சம்பளம் கேட்டா கைய பிடிக்கிறார்: டாக்டரை செருப்பால் விளாசிய நர்ஸ்!
சம்பளப் பாக்கியை தராத டாக்டரை நர்ஸ் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதர்பா அருகே உள்ள மனோராவில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் மகேஷ் ரத்தோட். இவரது மருத்துவமனையில் 26 வயது பெண் ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு டாக்டர் சம்பளம் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதுபற்றி பலமுறை கேட்டும் அவர் சரியான பதில் சொல்லவில்லையாம். இதையடுத்து கடந்த 13-ம் தேதி மருத்துவமனையில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார் டாக்டர். அப்போதும் நர்ஸ் சம்பளம் பற்றி கேட்டார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. செருப்பைக் கழற்றி டாக்டரை திடீரென தாக்கினார் நர்ஸ். இதைக் கண்டு அங்கிருந்த மற்ற நர்ஸ்களும் நோயாளிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி இருவருமே போலீசில் புகார் செய்துள்ளனர். ‘சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதைக் கேட்டால் என் கையைப் பிடிக்கிறார்’ என்று தனது புகாரில் கூறியிருக்கிறார் நர்ஸ். போலீசார் விசாரித்து வருகின்றனர்.