எச்.ஐ.வி ரத்தம் கொண்ட ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்!

எச்.ஐ.வி ரத்தம் கொண்ட ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்!
எச்.ஐ.வி ரத்தம் கொண்ட ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்!

எச்.ஐ.வி ரத்தம் நிரப்பிய ஊசியுடன் மருத்துவமனை கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர் மீது வழக்குப் பதியபட்டுள்ளது.

கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ. வழக்கம் போல மருத்துவமனைக்கு நேற்று வந்த இவர், கையில் ஒரு சிரிஞ்சுடன் மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் லட்சுமி பிரசாத் அறைக்குச் சென்றார். இதை மற்ற டாக்டர்கள் சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக சென்ற டேவிட் ராஜூ, லட்சுமி பிரசாத் மீது அந்த ஊசியை செலுத்த முயன்றார்.

அதற்குள் அங்கிருந்தவர்கள் லட்சுமி பிரசாத்தை இழுத்துக் காப்பாற்றினர். அவரை விடாமல் துரத்திய டாக்டர் டேவிட் ராஜூ, அந்த ஊசியை அவர் உடலில் செலுத்திவிட மேலும் துடித்தார். ஆனால், அதற்குள் அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து ஊசியில் இருந்த ரத்தத்தை வெளியேற்றினர். 

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேகமாக வந்த அவர்கள் டேவிட் ராஜூவை பிடித்து விசாரித்தனர். 
அப்போது அவர் கையில் இருந்த ஊசியில் நிரப்பட்டிருந்தது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் என்றும் டூட்டியில் தன்னை ஓரங்கட்டுவதால் கண்காணிப்பாளரை பழிவாங்குவதற்காக, அவர் மேல் ஊசியை செலுத்த டேவிட் ராஜூ முயன்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். டேவிட் ராஜூ மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com