"அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு வேண்டாம்" - ராணுவ தளபதி நரவானே

"அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு வேண்டாம்" - ராணுவ தளபதி நரவானே
"அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு வேண்டாம்" - ராணுவ தளபதி நரவானே

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என தெரிவித்துள்ள ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, இதை வைத்து யாரும் தப்புக்கணக்கு எதுவும் போட்டுவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

ராணுவ தினத்தை ஒட்டி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர் அமைதி நிலவ வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையில் இருந்து பிறந்தது என்றும், எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்துகொண்டு விடக் கூடாது என்றும் விளக்கினார். இந்தியாவின் எல்லையை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நமது ராணுவம் முறியடிக்கும் என்றும் ஜெனரல் எம்எம் நரவானே தெரிவித்தார். இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் தயாராக இருப்பதாகவும் ஜெனரல் எம்எம் நரவானே தெரிவித்தார்.

மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும் அதிகாரிகளும் பணிபுரிந்துவருவதாகவும் தளபதி நரவானே தெரிவித்தார். லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ராணுவ தளபதியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com