‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே

‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே

காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்வார்கள் என பலரும் கூறினார்கள்; ஆனால் எங்கள் சிவசேனா கட்சியினரே துரோகம் இழைத்து விட்டனர் என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர் என்று அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே விமர்சித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வலியுறுத்தி சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிவசேனா தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆதித்யா தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் தங்களிடம் கூறினர். ஆனால், சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com