do not administer banned drugs to livestock central government
கால்நடைகள்புதிய தலைமுறை

”கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக் கூடாது” - மத்திய அரசு!

கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Published on

கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு, குளோரெம்பினிகால் அல்லது நைட்ரோப்யூரான் என்ற மருந்தை செலுத்த, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

do not administer banned drugs to livestock central government
model imagex page

குறிப்பிட்ட இந்த மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடையின் இறைச்சியை சாப்பிட்டால் பெரும் ஆபத்து ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் தடைபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு, அந்த மருந்துகளை கால்நடை பண்ணைகளில் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த மருந்துகளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

do not administer banned drugs to livestock central government
”ஆடு, மாடுகளை இனி இந்த நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது” - கால்நடை பராமரிப்புத்துறை அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com