”அம்மாவாசை நாட்களில் உஷாராக இருங்கள்..” - உ.பியில் காவல்துறையினருக்கு டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை!

பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் பின்பும் ஒரு வாரத்திற்குப் பிறகு இருளாக இருப்பதால் அன்றைய நாட்களைப் பயன்படுத்தி குற்றவாளிகள் குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக டிஜிபி, கூறுகிறார்.
டிஜிபி விஜயகுமார்
டிஜிபி விஜயகுமார்WebTeam

உத்திரபிரதேச மாநில டிஜிபி விஜயகுமார் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அமாவாசை நாட்கள் அன்றும், அதன் பிறகு வரும் முன் 7 நாட்களிலேயும் பின் 7 நாட்களிலேயும் அதிகப்படியான குற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஆகவே இந்நாட்களில், குற்றவியல், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் , அமைப்புகளின் (சிசிடி எனெஸ்) குற்றப்பதிவுகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நடந்து வரும் குற்றங்களை சமாளிக்க ஒரு வரைபடத் திட்டத்தைத் தயாரிக்கவும், பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் அமாவாசைக்கு ஒரு வாரத்திற்கு முன்பும் பின்பும் ஒரு வாரத்திற்குப் பிறகு இருளாக இருப்பதால் அன்றைய நாட்களைப் பயன்படுத்தி குற்றவாளிகள் குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக டிஜிபி, கூறுகிறார். ஆகையால் இந்தக் காலகட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களை மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

செப்டம்பர் 14 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் அமாவாசை வருவதால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வலுவான காவல்துறை மூலம் மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆகவே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இரவு நேர ரோந்து பணியை உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிபி கூறியுள்ளார்.

இந்த சுற்றறிக்கை காவல்துறையினருக்கு மட்டுமல்ல, பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது அமாவாசையில் போது பல்வேறு கும்பல் தாக்குதல் நடத்துகிறது. “இந்த கும்பல்களின் உறுப்பினர்கள் அமாவாசைக்கு முன் முட்களில் தங்கி, குற்றத்தை நிறைவேற்றிய பிறகு, அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு விலங்குகளை பலியிடுகிறார்கள். இவர்கள் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் வெளிவருவது கிடையாது” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com