கடத்தப்பட்ட இளமதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக எம்.பி

கடத்தப்பட்ட இளமதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக எம்.பி
கடத்தப்பட்ட இளமதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக எம்.பி

சேலத்தில் ‘சாதிமறுப்பு திருமணம்’ செய்த நிலையில் கடத்தப்பட்ட மணப்பெண் இளமதிக்காக திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காத‌லித்தனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு சில நாட்களுக்கு முன்னர் இளமதியை திருமணம் செய்து கொண்டார்.

அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றனர். மேலும் புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியையும் கடத்திச் சென்றனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. பின்னர் காவல்துறையினர் தங்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து, மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர். மேலும் மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரையிலும் இளமதி மீட்கப்படவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களும் பிடிபடவில்லை எனப்படுகிறது.

இந்நிலையில் சாதிமறுப்பு செய்த இளமதி கடத்தப்பட்ட சம்பவத்தை மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் குறிப்பிட்டு பேசினார். அப்போது பேசிய அவர், சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியினரான செல்வன் மற்றும் இளமதி ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். திருமணம் முடிந்த உடனே மணப்பென் இளமதி கடத்தப்பட்டார். இதற்கான சிசிடிவி காட்சிகள் இருந்தும் காவல்துறையினர் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com