”நீதிமன்றம் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கா?”- ஸ்மிருதி இரானி பேச்சுக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி

மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய கருத்துக்கு, திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
ஆ.ராசா, ஸ்மிருதி இரானி
ஆ.ராசா, ஸ்மிருதி இரானிட்விட்டர்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதன்மீது இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கடுமையாக உரையாற்றினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துப் பேசினார். ஊழல் பற்றி அவர் பேசியபோது திமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதாக பரபரப்பான புகாரை முன்வைத்தார். அதோடு நீதிமன்றம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக ஆ.ராசா, “உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? நாட்டின் நீதிமன்றங்களை அச்சுறுத்தி கட்டுப்படுத்தி வைத்துள்ளதா பாஜக? ’கைது செய்யப்படுவீர்’ என ஸ்மிருதி இரானி எனக்கு மிரட்டல் விடுக்கிறார்” என தெரிவித்தார். அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது குற்றஞ்சாட்டியதுடன் அவை தலைமையிடமும் ஆ.ராசா இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com