
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. இதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து ஆளும் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி - தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்துள்ளார். அவர் கடந்த 2019 இடைத்தேர்தலில் தேர்வாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் வேறு கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தற்போது 12 எம்.எல்.ஏக்கள் பலம் மட்டுமே கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி 14 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது.