ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் முன்கூட்டியே தொடங்கியது தீபாவளி: பிரதமர் மோடி பெருமிதம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டதால் தீபாவளி கொண்டாட்டம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காந்திநகர் ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சமமற்ற தன்மை உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டதால் தீபாவளி கொண்டாட்டம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். ராஜ்கோட்டில் பேசிய நரேந்திரமோடி, ஏழை மக்களும் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு விமானப் போக்குவரத்து கொள்கையை மாற்றியமைத்தது பாரதிய ஜனதா அரசுதான் என குறிப்பிட்டார்.