தீபாவளி ஷாப்பிங்.. 3.5 லட்சம் கோடி ரூபாயை தொடும் வணிகம்! மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

நடப்பு தீபாவளி சீசனில் மட்டும் நாடெங்கும் பொருட்களின் விற்பனை மூன்றரை லட்சம் கோடி ரூபாயை தொடும் என வணிகர்கள் சங்கம் கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சிமுகநூல்

நடப்பு தீபாவளி சீசனில் மட்டும் நாடெங்கும் பொருட்களின் விற்பனை மூன்றரை லட்சம் கோடி ரூபாயை தொடும் என வணிகர்கள் சங்கம் கணித்துள்ளது.

வீடுகளில் மகிழ்ச்சி ஒளி பரவும் தீபாவளி பண்டிகைக்காலத்தில் குடும்பங்களின் செலவுகள் பட்ஜெட்டை தாண்டி எகிறுவது வழக்கம்.  புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என பணம்
தண்ணீராக பாயும்.

இவையெல்லாம் ஒரு தனி நபர்... ஒரு குடும்பத்தின் பார்வையில்தான்... மறுபுறம் வணிகத்திற்கான பிரமாண்ட களமாகவும் விளங்குகிறது தீபாவளி. ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகளோடு நின்றுவிடாமல் மொபைல் ஃபோன்கள், பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள், நகைகள் என விறுவிறுப்பாக நடக்கிறது விற்பனை. கடைகளில் மட்டுமல்ல
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களிலும் அனல் பறக்க விற்பனை நடந்து வருகிறது. இதுதவிர உணவகங்கள், வாகனப் போக்குவரத்து என சேவை துறையிலும் பாய்ச்சல் காட்டுகிறது தீபாவளி வணிகம். 

இந்தாண்டு தீபாவளி சீசனில் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 5 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் கூட நாடு முழுவதும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடக்கும் என அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உலகதங்க கவுன்சிலின் இந்திய பிரிவு தெரிவிக்கையில், “முந்தைய ஆண்டுகளைவிட இந்தாண்டு தீபாவளி விற்பனை சில வாரங்களுக்கு முன்பே அதிகரிக்க தொடங்கிவிட்டது.இது 30 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கத்தின் விலை ஓராண்டில் 20%  அதிகரித்துள்ள நிலையில் இம்முறை தீபாவளி விற்பனை 10% அதிகரிக்கும்” என கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு கூறுகலையில்,”தீபாவளி பண்டிகையின்போது மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நகைகள் விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளது.”

FADA என அழைக்கப்படும்வாகன விற்பனையாளர்கள் சங்கம். கூறுகையில், ”அண்மையில் முடிந்த நவராத்திரி சீசனில் மட்டும் புதிய வாகனங்களுக்கான பதிவு 18% அதிகரித்தது. தீபாவளி சீசனில் இதுமேலும் உயரும் என எதிர்பார்ப்படுகிறது. ”

பொருளாதார வளர்ச்சி
பலரது உயிரைக் காப்பாற்றி விட்டு இறுதியாக தன் உயிரை விட்ட காவலர் - திருப்பத்தூரில் நிகழ்ந்த சோகம்!

சந்தை ஆலோசனை நிறுவனமான CBRE கூறுகையில்,” நடப்பு நவராத்திரி, தீபாவளி சீசனில் வீடுகள் விற்பனை சென்னை,பெங்களூரு உள்ளிட்ட 7 பெருநகரங்களில் 25% முதல் 30% வரை அதிகரிக்கும் நிலை உள்ளது.”

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் தீபாவளி விற்பனை
களைகட்டியுள்ளது. காஸ்ட்கோ, வால்மார்ட், டார்கெட் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள். கிறிஸ்துமஸ் போன்று அமெரிக்காவின் முக்கிய வியாபார சீசன்களில் ஒன்றாகவும் தீபாவளி மாறியுள்ளது என்கின்றனர் அங்குள்ள வணிகர்கள். தீபாவளி என்பது குடும்பங்களின் மகிழ்ச்சிக்கான ஒரு தளமாக மட்டுமல்ல... நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு களமாகவும் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com