விவாகரத்துக்குப் பிறகும் வளர்ப்பு நாய்கள் மாறி மாறி பராமரிப்பு:நெகிழ்ச்சியூட்டிய தம்பதிகள்

விவாகரத்துக்குப் பிறகும் வளர்ப்பு நாய்கள் மாறி மாறி பராமரிப்பு:நெகிழ்ச்சியூட்டிய தம்பதிகள்

விவாகரத்துக்குப் பிறகும் வளர்ப்பு நாய்கள் மாறி மாறி பராமரிப்பு:நெகிழ்ச்சியூட்டிய தம்பதிகள்
Published on

(கோப்பு புகைப்படம்)

மும்பையில் விவாகரத்துப் பெற்ற ஒரு தம்பதியினர் தாங்கள் வளர்த்த இரண்டு நாய்களை பிரித்து எடுத்துச் செல்ல மனமில்லாமல் வாரம்தோறும் மாறி மாறி வளர்த்துவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவி பிரச்சனையில் விவாகரத்தாகி பிரியும் நேரத்தில் பெற்ற குழந்தைகளே பாதிக்கப்படும்போது வளர்த்த நாய்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா? ஆனால், ஒரு தம்பதியினர் நாய்களை விட்டுவிடாமல் பிள்ளைகளாக நினைத்து மாறி மாறி வளர்த்து வருகிறார்கள்.

மும்பையில் குழந்தையில்லாத வங்கிப் பணியாளரும் அவரது மனைவியும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், குடும்ப காரணங்களால் தம்பதிகளுக்குக்கு சிறு சிறு பிரச்னை வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்துப் பெற்றனர். ஆனால், அவர்கள் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் பிரிக்க விரும்பவில்லை.

(கோப்பு புகைப்படம்)

காரணம், அந்த நாய்கள் இரண்டும் அவ்வளவு ஒற்றுமையாக பாசமுடன் வளந்து வந்துள்ளன. அதனால், அவர்கள் அதனை பிரிக்க விரும்பவில்லை. மாற்று யோசனையில் இறங்கிய அவர்கள், ஒவ்வொரு வாரமும் நாயை வாரத்தில் மூன்று நாட்கள் வந்து பார்ப்பதோடு வெளியில் அழைத்துச் செல்லவும் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி அழைத்துச் செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு விவாகரத்துக்கோரிய தம்பதியினர் பூனையை பிரித்துக்கொள்ள கேட்டது நினைவுக்கு வருவதாக நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com