\
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய நடவடிக்கைக்கு தயாரான அரசு..!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய நடவடிக்கைக்கு தயாரான அரசு..!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய நடவடிக்கைக்கு தயாரான அரசு..!
Published on

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து நாளை முதல் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அக்டோபர் 2 ஆவது வாரத்தில் 15 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக கேரள சுகாதரத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஆலோசனையில் பொதுமுடக்கம் வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்த நிலையில் கொரோனா விதிகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. 

 இதைத் தொடர்ந்து தங்கக்கடத்தல் மற்றும் லைப்மிஷன் திட்ட முறைகேடுகளை கண்டித்து நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. தனிமனித இடைவெளியுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவு பிறப்பிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com