பிரதமர் மோடியை விமர்சித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பாக, கர்நாடகாவில் வாட்ஸ் அப் குருப் அட்மின் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணா என்பவர், வாட்ஸ் அப் குருப்பில் மோடியை விமர்சித்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த குரூப்பில் உள்ள மற்றொருவர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கிருஷ்ணாவையும், கணேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை மற்ற குழுக்களுக்கு பகிர்ந்த மற்றொருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

