\
கர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு
Published on: 

கர்நாடகா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நவம்பர் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 

சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த மாதம் இறுதியில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வாரம் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வெளியாகவில்லை. இதனையடுத்து நவம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்.

கொறடா உத்தரவை மீறியதாக ஜே.டி.எஸ்., காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com