'தமிழ் மொழியால் இந்தியாவுக்கு பெருமை' -பிரதமர் நரேந்திர மோடி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்திய சமூகம் ஒருபோதும் ஏற்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக 47-ஆவது முறையாக மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே மரணதண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துகளை பிரதமர் கூறினார். மேலும் பேசிய அவர் உலக மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பது இந்தியாவின் பெருமை என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாரத் ரத்னா விருது வென்ற டாக்டர். எம். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கட்டிடக்கலையை போற்றும் விதமாகவும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மன்கி பாத் உரையில் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்புப்பின்போது, மக்களுக்கு உதவிட தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர், முப்படை பிரிவினர் கைகோர்த்து செயல்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.