\
திருவிழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்: இருவர் உயிரிழப்பு

திருவிழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்: இருவர் உயிரிழப்பு

திருவிழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்: இருவர் உயிரிழப்பு
Published on

மும்பையில் நடைபெற்ற தஹி-ஹண்டி விழாவில் உரியடிக்கும் நிகழ்ச்சிகளின் போது இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மகராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற தஹி-ஹண்டி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒருவர் மேல் ஒருவர் நின்று உரியடிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழந்தனர்.

பால்கர் பகுதியில் ரோஹன் கினி என்பவர் உரியடித்த பின்னர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல் அய்ரோலி என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் உரியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வந்த ஜெயேஷ் என்பவர் மின்வயர் ஒன்றின் மேல் கால் வைத்ததில் தூக்கிவீசப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் மும்பையில் பல்வேறு கொண்டாட்டங்களின் போது 117 பேர் காயமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com