தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள்
Published on

தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவரையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அனைவருக்கும் உணவு என்ற நோக்கத்தின் அடிப்படையில், கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மன்மோகன்சிங் பிரதமாக இருக்கும்போது கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளை இந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விஷயத்தில் தலைமைச் செயலாளர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொடர்புடைய அனைத்துத் துறைகளையும், அதிகாரிகளையும், குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தையும் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com