அயோத்திக்கு நேரடி விமான சேவை... ஜனவரி 6 முதல் தொடக்கம்!

அயோத்திக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஜனவரி 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தி நகரம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான போயிங் விமானம் தரையிறங்கி சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.

இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி அயோத்தி விமான நிலையத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பயணிகள் விமான சேவை தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சென்னை, டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com