”ஒற்றுமை யாத்திரையில் ஒருநாள் பங்கேறுங்கள்...”- லாலு பிரசாத் யாதவை அழைக்கும் காங்கிரஸ்!

”ஒற்றுமை யாத்திரையில் ஒருநாள் பங்கேறுங்கள்...”- லாலு பிரசாத் யாதவை அழைக்கும் காங்கிரஸ்!
”ஒற்றுமை யாத்திரையில் ஒருநாள் பங்கேறுங்கள்...”- லாலு பிரசாத் யாதவை அழைக்கும் காங்கிரஸ்!

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் சேராத கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என லாலு பேசியதை சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ்ஸில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் சேராத கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ள நிலையில், அவரை தங்கள் கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், இந்தியாவில் தற்போது அவசர நிலை அமலில் இருப்பது போல சர்வாதிகார ஆட்சி நடப்பதாக விமர்சித்தார். எனவே, நாட்டை பாதுகாக்க பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்த லாலு, சேராத கட்சிகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

இந்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், இது நல்ல யோசனை என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் 'ஒற்றுமை பயணத்தில்' ஒரு நாள் பங்கேற்குமாறு லாலு பிரசாத் யாதவுக்கு திக் விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அப்படி பங்கேற்றால், உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com