டிஐஜி ரூபா இடமாற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவை இல்லை: சித்தராமையா

டிஐஜி ரூபா இடமாற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவை இல்லை: சித்தராமையா

டிஐஜி ரூபா இடமாற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவை இல்லை: சித்தராமையா
Published on

பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியே என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில் போலீ்ஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் அரசின் போக்கு ஆச்சரியம் தருவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா மாற்றம் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், சிறை முறைகேடு பற்றிய விசாரணை நடுநிலையாக நடைபெறவே ரூபா மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com