இந்தா மாத்திட்டாங்கள்ல: டிஐஜி ரூபா டிரான்ஸ்பர், இது 31-வது முறை!
பெங்களூரு சிறை முறைகேடுகள் பற்றி புகார் கூறிய போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா, இன்று அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இது அவருக்கு 31-வது டிரான்ஸ்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உட்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது பற்றி டி.ஜி.பி. சத்யநாராயண ராவுக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்தார் ரூபா. இதற்காக டிஜிபி ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு புகார் கூறினார். இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இவர் மாற்றப்படலாம் என பேசப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார். 16 வருடங்களாக போலீஸ் துறையில் இருக்கும் ரூபா இதுவரை 30 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். இன்று 31-வது முறையாக மாற்றப்பட்டுள்ளார். அவரை பெங்களூர் நகர போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி சத்யநாராயண ராவும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.