பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களையே சமூகம் குறைகூறுகிறது: நீதிபதி வேதனை

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களையே சமூகம் குறைகூறுகிறது: நீதிபதி வேதனை
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களையே சமூகம் குறைகூறுகிறது: நீதிபதி வேதனை

இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவதால், ஒரு பெண், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கூறியிருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் பேசிய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, சமூகம் தங்களையேக் குறை கூறும் என்பதால் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம். இந்த பிரச்னையால் நீண்ட காலமாக  பெண்கள் அவதிப்பட்டு வருவதால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் "நாங்கள் முற்றிலும் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.

பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்களை வெளியில் சொல்லும்போது பெண்கள் எதிர்கொள்ளும் களங்கத்தை பற்றி பேசிய பானர்ஜி, பாதிக்கப்பட்டவர்கள் கவர்ச்சியாக இருந்தார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்தார்கள் என்றுதான் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார், "ஒரு பெண் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று சொல்வது எவ்வளவு கடினம், ஏனென்றால் சமுதாயமாக நாம் உடனடியாக ஒரு பெண்ணை நோக்கி ஒரு விரலை நீட்டுகிறோம்” எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com