பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?
பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம்: உருமாறிய கொரோனாவா?

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.  

இன்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் " பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து அனுப்பியுள்ள 13 மாதிரிகளின் முடிவுகள் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை புனே ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் 2 வது பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. 2-வது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஆலோசனை நடத்தி மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அனைத்து மாநில மாதிரி முடிவுகளை பெற்ற பிறகே எந்தவகையாக கொரோனா உருமாற்றமடைந்துள்ளது என்பது பற்றி தெரியவரும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com