\
ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு

ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு

ஊதிய உயர்வாக பைக், கார்: வைர வியாபாரிகளின் தங்க மனசு
Published on

குஜராத்தில், வைர வியாபாரி ஒருவர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தைப் பரிசளித்துள்ளார். சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா, ஊதிய உயர்வாக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே பைக் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை வாயடைக்கச் செய்துள்ளார் இந்த வைரவியாபாரி.

ஏற்கனவே சவ்ஜிபாய் தொலாக்கியா என்ற சூரத்தை சேர்ந்த மற்றொரு வைர வியாபாரி ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை பரிசாக வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com