தோனி மகளுக்கு அழைப்பு: கேரள கோயில் நிர்வாகம் முடிவு

தோனி மகளுக்கு அழைப்பு: கேரள கோயில் நிர்வாகம் முடிவு
தோனி மகளுக்கு அழைப்பு: கேரள கோயில் நிர்வாகம் முடிவு

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் நிர்வாகிகள் தோனியின் மகளை விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி. இவர் மனைவி சாக்‌ஷி. இவர்களுக்கு ஸிவா என்ற மகள் உள்ளார். இரண்டு வயதான ஸிவா மலையாள சினிமா பாடல் ஒன்றை பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ‘அம்பலப்புழே உன்னிக் கண்ணனோடு நீ’ என்று தொடங்கும் அந்தப் பாடல் மோகன்லால், ஜெயராம் நடித்த ’அத்வைதம்’ என்ற படத்தில் இடம்பெற்றது.
இந்தப் பாடலைக் கேட்ட, திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணா கோயில் நிர்வாகிகள் தோனி மகளை கோயிலுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘தோனியின் மகள் பாடிய பாடலைக் கேட்டோம். இதையடுத்து தோனியை சந்தித்து ஏதாவது திருவிழா நாளில் மகளுடன் கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுக்க இருக்கிறோம்’ என்றார்.

‘இந்திய மொழிகளில் கொஞ்சம் கடினமான மொழி, மலையாளம். ஆனால், அதை மலையாளி குழந்தையை போலவே தெளிவாகப் பாடியிருக்கிறார் தோனியின் மகள். அவரை வாழ்த்தியும் ஜனவரி 14-ம் தேதி ’பந்த்ரண்டு கலாபம்’ விழாவுக்கு அழைக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் ஆலோசனைக் குழு தலைவர் கொட்டாரம் உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com