சுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி?

சுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி?
சுதந்திர தினத்தன்று  லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி?

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் உள்ள லே நகரில் நடைபெறும் சுதந்திரத்தின விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கின் லே நகரில் வருகின்ற ஆகஸ்ட் 15 கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் இந்தியத் தேசிய கொடியை தோனி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தோனி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவி வகித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வபோது ராணுவத்தில் இணைந்து  பயிற்சி பெற்றும் வந்தார். இதற்கிடையே உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தோனி இரண்டு மாத ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கேட்டுக்கொண்டிருந்தார். அதன் படி 106 பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்தார் தோனி. இந்தப் பயிற்சியில் கடந்த மாதம் ஜீலை 31 முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தங்கி பயிற்சி பெறுகிறார் தோனி.

இந்தப் பயிற்சியில் தோனி ராணுவத்தின் ஒரு பிரிவான விக்டர் படையுடன் இணைந்து பணியாற்றி வரும் தோனி ராணுவ வீரர்களுடன் இணைந்து விளையாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com