\
தார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 11 பேரை காணவில்லை.

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.

திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்ததால் கட்டுமான தொழிலாளர்கள், கடைகளுக்கு வந்த வாடிக்கையா ளர்கள், பணியாளர்கள், கம்யூட்டர் மையத்துக்கு வந்த மாணவிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் உதவியோடு உயிருடன் முதல் நாளில் மீட்டனர். 2 பேர் பிணமாக மீட்கப் பட்டனர்.

இரவு பகலாக மீட்பு பணி நீடித்தது. 2-வது நாள் மீட்பு பணியின்போது 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. நேற்று மேலும் 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நள்ளிரவில் ஒருவரின் உடல் மீட்கப் பட்டது. இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 11 பேரை காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com