புதுச்சேரி: ரெங்கசாமியின் காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்: நடந்தது என்ன?

புதுச்சேரி: ரெங்கசாமியின் காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்: நடந்தது என்ன?

புதுச்சேரி: ரெங்கசாமியின் காரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்: நடந்தது என்ன?
Published on

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியின் காரை முற்றுகையிட்டு அவரது கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கக்கூடிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் மண்ணாடிப்பட்டு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஒதுக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள கோயிலுக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரது கட்சி தொண்டர்கள் அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது எனக்கூறி ரெங்கசாமியின் காரை வழிமறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com