\
Dharmendra Pradhan to Be Removed Sonam Wangchuk Letter Sparks Buzz
தர்மேந்திர பிரதான்PT

தர்மேந்திர பிரதானை நீக்க முடிவு? சோனம் வாங்சுக் எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து அரசு பரிசீலனை செய்யும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் தனக்கு உறுதியளித்துள்ளதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
Published on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து அரசு பரிசீலனை செய்யும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் தனக்கு உறுதியளித்துள்ளதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். முன்னதாக அவ்விரு அமைச்சர்களும் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து உண்ணாவிரத்ததைக் கைவிட வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களுக்கு சோனம் வாங்சுக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது,

Sonam Wangchuk
Sonam Wangchukweb

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது மற்றும்கல்வி அமைச்சரின் ராஜினாமாவைப் பரிசீலிப்பது குறித்து அரசு சாதகமாக முடிவெடுக்கும் என நீங்கள் எனக்கு உறுதியளித்துள்ளீர்கள்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நேர்மையான கல்விக்காகப் போராடிய மாணவர்கள் மீது எந்தப் பழிவாங்கும் சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்ற தெளிவான உறுதிமொழியை அரசு அளிக்க வேண்டும் என்றும், அந்த உறுதிமொழி கிடைத்தால் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன் எனவும் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் (NEET) தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்துவந்தார்.

ladakh activist sonam wangchuk was taken to AIIMS
சோனம் வாங்சுக்எக்ஸ் தளம்

அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தற்போது அவர் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com